புனர்வாழ்வு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மேலுமொரு தொகுதி சிறுவர் போராளிகளை விடுவிக்க நடவடிக்கை-புளொட் தலைவர்

(லங்கா தமிழ் நியூஸ் 29-03-2010) புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலிகள் அமைப்பின் சிறுவர் போராளிகளை விடுவிப்பது தொடர்பில் அண்மையில் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான விசேட குழு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தது.

ந‌ளி‌னியை ‌விடு‌‌வி‌க்க முயலாது: த‌மிழக அரசு ப‌தி‌ல்

(லங்கா தமிழ் நியூஸ் 29-03-2010) மு‌ன்னா‌‌ள்‌ ‌பிரதம‌ர் ரா‌‌ஜீ‌வ் கா‌ந்‌தி கொலை வழ‌க்‌‌கி‌‌ல் வேலூ‌ர் ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ள ‌ந‌‌ளி‌னியை ‌விடு‌வி‌க்க இயலாது எ‌ன்று த‌‌‌மிழக அரசு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இலங்கை தமிழ் அகதிகள் தமிழ்நாடு வரத் தடை, கடல்வழி வந்தால் கைது: இந்திய கடலோரக் காவல்படை எச்சரிக்கை

(லங்கா தமிழ் நியூஸ் 29-03-2010) இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிறிலங்காப்படையினருக்கும் இடையிலான போர் முடிவடைந்துவிட்டதால், இலங்கை தமிழர்கள் எவரும் அகதிகள் என்ற போர்வையில் கடல்வழியாக தமிழ்நாட்டிற்குள் வரக்கூடாது என்று இந்திய கடலோரக் காவல்படை தடை விதித்துள்ளது.

புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் வன்னி அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்) ஆசிகுளம் பகுதிக்கு விஜயம்

(லங்கா தமிழ் நியூஸ் 28-03-2010) வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்) மற்றும் புளொட் முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் வவுனியா ஆசிகுளம் பகுதிக்கு விஜயம்செய்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். அங்கு உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திலும் அவர்கள் உரையாற்றினர்.

சாவகச்சேரி மாணவன் மீதான படுகொலை என்பது வன்முறை கலாச்சாரத்தை நோக்கி

(லங்கா தமிழ் நியூஸ் 28-03-2010) யாழ். குடாநாடு இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் தருணம் பார்த்து மிகக் கொடுமையான முறையில் நடத்தப்பட்டிருக்கும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனான திருச்செல்வம் கபில்நாத் என்பவர் மீதான படுகொலை என்பது யாழ்.குடாநட்டை மறுபடியும் வன்முறைக் கலாசாரத்தை நோக்கி திசைதிரும்பிவிடும் செயலாகும் என்றும், இப் படுகொலைச் சம்பவமானது தேர்தல் கால வன்முறைச் சம்பவங்களோடு தொடர்புபட்ட ஒரு நிகழ்வாகவே தெரியவந்துள்ளது எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா முகாம்களில் உள்ள மக்கள் ஜூன் இறுதிக்குள் குடியேற்றப்படுவர்

(லங்கா தமிழ் நியூஸ் 28-03-2010)வவுனியா முகாம்களிலுள்ள சுமார் எண்பதினாயிரம் பேரும் எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் குடியேற்றப்பட்டுவிடுவரென நம்பிக்கை தெரிவித்துள்ள வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ், அடுத்தமாத இறுதிக்குள் கிளிநொச்சி, மன்னார், வவுனியா, வவுனியா வடக்குப் பகுதிகளிலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளின் தொண்ணூறு சதவீதமான கிராமங்களில் மக்கள்

கண்டி மாவட்ட மக்களுக்கு பணியாற்ற நான் கடமைபட்டுள்ளேன்-மனோ கணேசன்

(லங்கா தமிழ் நியூஸ் 28-03-2010 )எனது தந்தை அமரர் வி.பி.கணேசன் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தது கண்டி மாவட்டத்தின் அழகிய ஹம்பிட்டிய கிராமத்தில் ஆகும். கண்டி மாவட்ட மக்களுக்கு பணியாற்றுவது என்னை வளர்த்துவிட்ட மறைந்த எனது தந்தைக்கு நான் செய்கின்ற கைமாறாகும். எனவே அரசியல் தலைமையைத் தந்து கண்டி மாவட்ட மக்களுக்கு

Syndicate content